பொது செய்தி

தமிழ்நாடு

3.5 கி.மீ., தூர குழாய் அமைத்து ஏரிகளுக்கு நீர் கொண்டு வந்த மக்கள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
அரூர்: பருவமழை பெய்து வரும் நிலையிலும், அரூர், தென்கரைகோட்டை மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட, வடகரை ஏரி மற்றும் நாயக்கன் ஏரி நீரின்றி வறண்டுள்ளன. சுமார், 100 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரிகள் நிரம்பினால், 12 கிராமங்களில் உள்ள, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்னை தீரும். இந்நிலையில், வடகரை ஏரி, நாயக்கன் ஏரி நீர்ப்பாசன விவசாய

அரூர்: பருவமழை பெய்து வரும் நிலையிலும், அரூர், தென்கரைகோட்டை மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட, வடகரை ஏரி மற்றும் நாயக்கன் ஏரி நீரின்றி வறண்டுள்ளன. சுமார், 100 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரிகள் நிரம்பினால், 12 கிராமங்களில் உள்ள, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்னை தீரும். இந்நிலையில், வடகரை ஏரி, நாயக்கன் ஏரி நீர்ப்பாசன விவசாய குழுவினர், இந்த ஏரிகளுக்கு, தென்கரைகோட்டை கல்லாற்றிலிருந்து வெளியேறும் உபரிநீரை, நீரேற்று திட்டம் மூலம், 27 லட்சம் ரூபாய் செலவில் கொண்டு வர முடிவு செய்தனர். பொதுமக்களிடம் பணம் வசூலித்து, கடந்த ஒரு வாரமாக, தென்கரைகோட்டை கல்லாற்றிலிருந்து, வடகரை ஏரி வரையுள்ள, 3.5 கி.மீ., தூரத்திற்கு குழாய் பதித்தனர். தங்கள் சொந்த செலவில், குழாய் அமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து அசத்திய விவசாயிகள், பொதுப்பணித் துறையினர் தங்களுக்கு உதவ கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X