ஆற்றில் மூழ்கிய மாணவரை 2வது நாளாக தேடும் பணி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கிய மாணவரை 2வது நாளாக தேடும் பணி

Added : நவ 22, 2021
Share
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே, கதவணிபுதூர் பாம்பாறு ஆற்றில், கடந்த மூன்று நாட்களாக நீர்வரத்து அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் அதை பார்க்க அதே பகுதியை சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரி மாணவர் விக்னேஷ், 19, தன் நண்பர்களுடன் சென்றார். அப்போது, மொபைல்போனில் செல்பி எடுத்தபோது, நீரில் அடித்து செல்லப்பட்டார். தகவலின்படி ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் அவரை ஆற்றில் தேடினர்.

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே, கதவணிபுதூர் பாம்பாறு ஆற்றில், கடந்த மூன்று நாட்களாக நீர்வரத்து அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் அதை பார்க்க அதே பகுதியை சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரி மாணவர் விக்னேஷ், 19, தன் நண்பர்களுடன் சென்றார். அப்போது, மொபைல்போனில் செல்பி எடுத்தபோது, நீரில் அடித்து செல்லப்பட்டார். தகவலின்படி ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் அவரை ஆற்றில் தேடினர். நேற்று இரண்டாவது நாளாக தேடும் பணி நடந்தது.

* அரூர் அடுத்த வேப்பநத்தத்தை சேர்ந்தவர் அருண், 34, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 18ல் மாலை நண்பர்களுடன் கீழானூர் வரட்டாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைக்கு சென்றுள்ளார். இதில், இறங்கி குளித்தபோது மாயமானார். தகவலின்படி, அரூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர். நான்கு நாட்களாகியும் அருணை கண்டு பிடிக்க முடியாததால் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X