சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமான 10 நாளில் புதுப்பெண் திடீர் சாவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், கொல்லுப்பட்டியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி சுகுணா, 50; இவர்களின் மகள் தேன்மொழி, 20; இவருக்கும், பாலக்கோடு, பாப்பிநாயனப்பள்ளி அருகே முருக்கம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த, 10 நாட்களுக்கு முன் திருமணமானது. தேன்மொழி காவேரிப்பட்டணம் அருகே நாட்டாண்கொட்டாயில் உள்ள தன் சகோதரி வீடு சென்றார். அங்கு உணவு

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், கொல்லுப்பட்டியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி சுகுணா, 50; இவர்களின் மகள் தேன்மொழி, 20; இவருக்கும், பாலக்கோடு, பாப்பிநாயனப்பள்ளி அருகே முருக்கம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த, 10 நாட்களுக்கு முன் திருமணமானது. தேன்மொழி காவேரிப்பட்டணம் அருகே நாட்டாண்கொட்டாயில் உள்ள தன் சகோதரி வீடு சென்றார். அங்கு உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் அவர் இறந்தார். கெட்டு போன உணவை சாப்பிட்டதால் தேன்மொழி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து சுகுணா புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி, 10 நாட்களில் புதுப்பெண் இறந்துள்ளதால், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., விஜயராகவன் விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X