பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய பளு தூக்கும் போட்டி: முன்னாள் ஏ.டி.எஸ்.பி., தங்கம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கோவா மாநிலம் பனாஜியில், அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டி கடந்த, 16ல் துவங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து ஆண்கள், பெண்கள் என, 122 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பளு தூக்கும் போட்டியில் (பென்ச் பிரஸ்) மாஸ்டர்ஸ், 140 கிலோ எடைப்பிரிவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை

கிருஷ்ணகிரி: கோவா மாநிலம் பனாஜியில், அகில இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டி கடந்த, 16ல் துவங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து ஆண்கள், பெண்கள் என, 122 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பளு தூக்கும் போட்டியில் (பென்ச் பிரஸ்) மாஸ்டர்ஸ், 140 கிலோ எடைப்பிரிவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஏ.டி.எஸ்.பி.,யும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான வீரராகவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து, தமிழகத்திற்கும், போலீஸ் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, 1984ல் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றவர். மேலும், 2018, 2019ல் புனே, ஜலந்தர், டில்லி ஆகிய இடங்களில் நடந்த தேசிய போட்டிகளில், இரண்டாமிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. பணிஓய்வு பெற்ற பின்னரும், விடா முயற்சியாலும், ஆர்வத்தினாலும் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த, கிருஷ்ணகிரி முன்னாள் ஏ.டி.எஸ்.பி.,க்கு அவரது நண்பர்கள், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X