பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜ.,வினர் விருப்ப மனு

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம், நேற்று முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில், கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர், கட்சியினரிடமிருந்து நேற்று விருப்ப மனுக்களை பெற்றனர்.

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம், நேற்று முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.


ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில், கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர், கட்சியினரிடமிருந்து நேற்று விருப்ப மனுக்களை பெற்றனர். அமைப்புச்சாரா மாநில செயலாளர் சீனிவாசன் முதல் ஆளாக விருப்ப மனுவை வழங்கினார். நேற்று மதியம் வரை, 33 வார்டுகளில் போட்டியிட விருப்ப மனுவை கட்சியினர் வழங்கியிருந்தனர். வரும், 26 வரை, பா.ஜ.,வினர் விருப்ப மனுவை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலருக்கு போட்டியிட விரும்புபவர்கள் பொது வார்டுக்கு, 3,000 ரூபாய், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வார்டுக்கு, 1,500 ரூபாய் விருப்ப மனுவுடன் கட்டணமாக செலுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X