பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் கிராம மக்கள் கால்வாய் அமைக்க முயற்சி

Added : நவ 22, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: மத்தூர் அடுத்த, கிருஷ்ணகிரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில், பில்லக்கொட்டாயில், சாலை அமைக்க, ஐந்தடி உயரத்திற்கு மண் கொட்டப்பட்டு, தார்ச்சாலை அமைத்துள்ளனர். இதனால், 50க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் அப்பகுதியில், மழைநீர் செல்லும் வகையில் இருந்த பழைய சிறு பாலத்தை உடைத்து விட்டு, வேறு இடத்தில் பாலம் அமைத்துள்ளனர். இதனால், அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர்

போச்சம்பள்ளி: மத்தூர் அடுத்த, கிருஷ்ணகிரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில், பில்லக்கொட்டாயில், சாலை அமைக்க, ஐந்தடி உயரத்திற்கு மண் கொட்டப்பட்டு, தார்ச்சாலை அமைத்துள்ளனர். இதனால், 50க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் அப்பகுதியில், மழைநீர் செல்லும் வகையில் இருந்த பழைய சிறு பாலத்தை உடைத்து விட்டு, வேறு இடத்தில் பாலம் அமைத்துள்ளனர். இதனால், அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, ஐந்து நாட்களாக மேலாகியும் வெளியேறாமல் தேங்கி உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் கிராம மக்கள் ஒன்று கூடி, சாலை நடுவில் கால்வாய் அமைக்க முயற்சித்தனர். தகவலின்படி, பர்கூர் தாசில்தார் பிரதாப், மத்தூர் இன்ஸ்பெக்டர் அங்கு சென்று, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இப்பகுதியில் தேங்கும் மழைநீரால் மாற்றுத்திறனாளி பெருமாள், 70, என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதேபோல் லட்சுமி, 60, மற்றும் பூபாலன், 50, உள்ளிட்ட பல வீடுகளின் சுவர்கள் மழைநீரால் ஊறி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X