சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையில் மீன் பிடிக்க சென்றவர் பலி

Added : நவ 22, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கங்கலேரி பஞ்., சவுளூர் காலனியை சேர்ந்தவர் ராஜப்பா, 40, கூலித்தொழிலாளி; இவர், விடுமுறை நாட்களில், கே.ஆர்.பி., அணை நீர்தேக்க பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அவர் மீன் பிடிக்க அங்கு சென்றுள்ளார். வழக்கமாக சிறிது நேரத்தில் மீன் பிடித்து விட்டு, வீட்டுக்கு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் வீடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கங்கலேரி பஞ்., சவுளூர் காலனியை சேர்ந்தவர் ராஜப்பா, 40, கூலித்தொழிலாளி; இவர், விடுமுறை நாட்களில், கே.ஆர்.பி., அணை நீர்தேக்க பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அவர் மீன் பிடிக்க அங்கு சென்றுள்ளார். வழக்கமாக சிறிது நேரத்தில் மீன் பிடித்து விட்டு, வீட்டுக்கு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் நேற்று காலை அணை நீர்தேக்க பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, ராஜப்பா மீன் வலையில் சிக்கி இறந்து கிடந்தார். அவரது உறவினர்கள், ராஜப்பா சாவில் சந்தேகம் உள்ளதாகவும், மீன் பிடிக்கச் சென்ற அவரை கொலை செய்திருக்கலாம் தெரிவித்ததால், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X