பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு: ஆதித்தமிழர் பேரவை தலைவர் அறிவிப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஓசூர்: ''தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு,'' என, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வாழும் அருந்ததியர்களின் ஜாதி சான்றிதழ்களில், ஆதி திராவிடர் என உள்ளது.

ஓசூர்: ''தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு,'' என, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வாழும் அருந்ததியர்களின் ஜாதி சான்றிதழ்களில், ஆதி திராவிடர் என உள்ளது. இதனால் ஒட்டுமொத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், அருந்ததியர்கள் மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் குறைகிறது. வடக்கு மாவட்டங்களில் அருந்ததியர்களின் ஜாதி சான்றிதழ்களிலுள்ள ஆதி திராவிடர் என்பதை மாற்றி, அருந்ததியர்கள் என வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றது வரவேற்கத்தக்கது. அறிவிப்போடு நிற்காமல், உடனடியாக பார்லிமென்ட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அதை நிறைவேற்ற வேண்டும். தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில், ஒட்டுமொத்த அருந்ததியர் மற்றும் ஆதித்தமிழர் பேரவை, தி.மு.க.,வுக்கு ஆதரவாக இருக்கும். சட்டசபையில் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்ததுபோல், பஞ்சமி நிலங்கள் குறித்த புள்ளி விபரங்களை எடுத்து, அதை மீட்டு பட்டியலின மக்களுக்கு விரைவில் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X