பொது செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் நீர்திறப்பு வினாடிக்கு, 2,900 கன அடியாக திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 2,563 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 3,060 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதனால் ஆற்றில் ரசாயன நுரை ஏற்பட்டு, அணை மதகிற்கு எதிரே

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் நீர்திறப்பு வினாடிக்கு, 2,900 கன அடியாக திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 2,563 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 3,060 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதனால் ஆற்றில் ரசாயன நுரை ஏற்பட்டு, அணை மதகிற்கு எதிரே உள்ள, தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை நுரை சூழ்ந்தது. அவ்வழியாக பாதுகாப்பு கருதி, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு டவுன் பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 2,663 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில், 2,900 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் சென்ற போதும், நேற்று ரசாயன நுரை தென்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X