கதவணை மின் நிலையங்களில் ஒரு வாரமாக உற்பத்தி நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதவணை மின் நிலையங்களில் ஒரு வாரமாக உற்பத்தி நிறுத்தம்

Added : நவ 22, 2021
Share
மேட்டூர்: கதவணை நிலையங்களில், ஒரு வாரமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை அடிவாரம் முதல் கரூர் வரை, காவிரி குறுக்கே, 10 கி.மீ.,க்கு ஒன்று வீதம், செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு உள்பட, ஏழு இடங்களில் கதவணை மின் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தலா, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதற்கு காவிரியாற்றில் அதிகபட்சம், 20 ஆயிரம் கனஅடி நீர்

மேட்டூர்: கதவணை நிலையங்களில், ஒரு வாரமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை அடிவாரம் முதல் கரூர் வரை, காவிரி குறுக்கே, 10 கி.மீ.,க்கு ஒன்று வீதம், செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு உள்பட, ஏழு இடங்களில் கதவணை மின் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தலா, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதற்கு காவிரியாற்றில் அதிகபட்சம், 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்ற வேண்டும். கடந்த, 13ல் மேட்டூர் அணை நிரம்பியதால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. 14 காலை வினாடிக்கு, 28 ஆயிரம் கனஅடியாக இருந்த உபரிநீர் திறப்பு, பின் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. சில நாட்கள் வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று, 60 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் வெளியேறியது. வினாடிக்கு, 23 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றும் பட்சத்தில் மின் உற்பத்தி செய்தால் நீரின் அழுத்தத்தால், கதவணை மின் நிலைய இயந்திரங்கள் பாதிக்கப்படும். 14 முதல், நேற்று வரை, ஏழு கதவணை நிலையங்களில் மின் உற்பத்தி செய்யாததால் தினமும், 210 மெகாவாட் பாதிக்கப்பட்டுள்ளது. அணை நீர்திறப்பு, 23 ஆயிரம் அடி வரை குறைந்தால் மட்டும், கதவணை மின் நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும். இந்நிலையில், கதவணை நிலையங்களில் மின் உற்பத்திக்கு இடையூறாக இருந்த ஆகாயத்தாமரைகளை, வெள்ளம் அடித்து சென்றதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X