பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தனூர் அணையில் 29 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: சாத்தனூர் அணையிலிருந்து, 29 ஆயிரத்து, 119 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணை வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை, 119 அடி உயரத்துடன், 7,321 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அணையில், 45 கோடி

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையிலிருந்து, 29 ஆயிரத்து, 119 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணை வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை, 119 அடி உயரத்துடன், 7,321 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அணையில், 45 கோடி ரூபாய் மதிப்பில் ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அணையில், 99 அடி அளவிற்கு மட்டுமே நீர் தேக்க முடியும். இந்நிலையில் அணைக்கு வினாடிக்கு, 29 ஆயிரத்து, 119 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவிற்கு, அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த, 19ல், 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதில், அணையிலுள்ள தரைப்பாலம் மூழ்கிய அளவிற்கு நீர் சென்று, பூங்காவினுள் நீர் புகுந்து சேதமடைந்துள்ளது. இந்நிலையில், சாத்தனூர் அணை நீர் செல்லும் கால்வாயில், ராயண்டபுரத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அடையாளம் தெரியாத பெண் சடலத்தை, தண்டராம்பட்டு போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X