பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்த அருணாசலேஸ்வரர்; பக்தர்கள் வழிபாடு

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: கொரோனா கட்டுப்பாட்டால், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 19ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்ந்து, 11 நாட்கள் எரியும், 40 கி.மீ., தூரம் தெரியும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில்

திருவண்ணாமலை: கொரோனா கட்டுப்பாட்டால், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 19ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்ந்து, 11 நாட்கள் எரியும், 40 கி.மீ., தூரம் தெரியும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் சந்திரசேகரர், வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், பிரம்ம தீர்த்த குளத்தில், மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள், அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாட்டால், இந்தாண்டு நேற்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
துர்கா ஸ்டாலின் வழிபாடு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், துர்கா ஸ்டாலின், மஹா தீப தரிசனத்தை கண்டு வழிபட்டார். அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. இவை, 11 நாட்களுக்கு எரியும், 40 கி.மீ வரை தெரியும். இந்நிலையில் தீப திருவிழா முடிந்து, மஹா தீப தரிசனத்தை கண்டு கிரிவலம் செல்வதை துர்கா ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில், விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு, மஹா தீப தரிசனத்தை கண்டு வழிபட்டார். அப்போது, கோவில் குருக்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X