பொது செய்தி

தமிழ்நாடு

'தடுப்பணைகள் அமைக்காததால் பாலாற்ற தண்ணீர் வீணாகிறது'

Added : நவ 22, 2021
Share
Advertisement
வேலூர்: ''தடுப்பணைகள் அமைக்காததால், பாலாற்றில் வெள்ளம் வந்தும் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது,'' என, பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் கூறினார்.பா.ஜ., சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளில் போட்டியிட விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று வேலூர் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க.,

வேலூர்: ''தடுப்பணைகள் அமைக்காததால், பாலாற்றில் வெள்ளம் வந்தும் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது,'' என, பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் கூறினார்.
பா.ஜ., சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளில் போட்டியிட விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, நேற்று வேலூர் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் விலை கட்டுக்குள் இருக்கும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி இன்று, (22) முதல் டிச., 3 வரை தொடர் போராட்டம் நடத்தப்படும். கடந்த எட்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை, 10 ரூபாய் உயர்ந்தது. ஒரே நாளில், 10 ரூபாயை மோடி குறைத்து விட்டார். தமிழகத்தில், 222 கி.மீ., தூரம் ஓடும் பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்காததால், இப்போது வரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. முல்லை பெரியாறு அணையில், 110 அடிக்கு மேல் தேக்கினால் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் வரும். ஆனால், தண்ணீரை தமிழக அதிகாரிகள் திறந்து விட்டார்கள் என, அமைச்சர் துரைமுருகன் பொய் சொல்கிறார். தி.மு.க., அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழக நதிநீர் உரிமைகள் பறிபோகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X