சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே விபத்து: அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பலி

Added : நவ 22, 2021
Share
Advertisement
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தேசியநெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் சபரிமலை சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய அய்யப்ப பக்தர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள கொளம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த்(27), சூரியா(30), கணேசன்(35), ரமேஸ்(49), மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கத்தை சேர்ந்த

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தேசியநெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் சபரிமலை சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய அய்யப்ப பக்தர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள கொளம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த்(27), சூரியா(30), கணேசன்(35), ரமேஸ்(49), மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கத்தை சேர்ந்த செவமணி(28), லெட்சுமணண்(30) ஆகிய 6 பேர் அய்யப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு டவேரா காரில் சென்றுள்ளனர்.

நேற்று காலை சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்சி வழியாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். காரை கணேசன் என்பவர் ஓட்டியுள்ளார். அவரே காரின் உரிமையாளர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை டீ கடையோரம் நிறுத்திவிட்டு நேற்று நள்ளிரவு அனைவரும் தூங்கியுள்ளனர்.

இன்று (நவ.,22) அதிகாலையில் அனைவரும் எழுந்து மீண்டும் காரில் சொந்த ஊருக்கு கிளம்பினர். இந்நிலையில் கார் பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன்பேரையூர் பிரிவு அருகே சென்ற போது மைல்கல்லில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் ஆனந்த், சூர்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில், சூரியா என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் கொளம்பாக்கம் பகுதியில் தங்கியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. காரில் பயணித்த மற்ற நால்வரும் காயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் ஓட்டுனர் கணேசன் கவலைக்கிடமாக உள்ளார்.

ஓட்டுனரின் துாக்க கலக்கத்தால் கார் மைல்கல்லில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X