பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி டிச.,3 வரை தொடர் போராட்டம்: அண்ணாமலை

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (51) | |
Advertisement
சென்னை: தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி டிசம்பர் 3ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. மேலும், மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5
Petrol Diesel, VAT, BJP, Protest, Annamalai, Tamilnadu, பெட்ரோல், டீசல், வாட் வரி, குறைப்பு, பாஜக, பாஜ, போராட்டம்

சென்னை: தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி டிசம்பர் 3ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. மேலும், மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5 ரூபாயும் குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது.


latest tamil news


தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூபாய் 100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (நவ.,22) முதல் டிசம்பர் 03 வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து, தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,கனடா
23-நவ-202106:31:18 IST Report Abuse
Siva Nothing you can do here. The more we rely on the fossil fuel the more we suffer. The only lasting solution is move away from fossil fuels or use public transit. You will do a favor to the environment and save a few bucks. There is no way India can keep the cost down when there is big supply and demand issue. It is going to get a lot worse in the future.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
23-நவ-202101:14:36 IST Report Abuse
Venkatakrishnan நீ எந்த ஸ்கூல் பா தம்பி....?
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
23-நவ-202101:13:42 IST Report Abuse
Venkatakrishnan ஆர்வக்கோளாறு, கோமாளிகளையெல்லாம் கட்சித் தலைவனாக்குனா இதுதான் நிலைமை.. இன்னும் 100 வருஷம் ஆனாலும் தமிழகத்தில் தாமரை மலரப்போவதில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X