ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை: சீனா சோதனை| Dinamalar

ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை: சீனா சோதனை

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (15)
Share
பெய்ஜிங்: ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகம் உறுதி செய்துள்ளது.வடகொரியா தொடர்ந்து அணு ஆராய்ச்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பில் மும்முரம் காட்டி வந்தது. இதற்கு உலக நாடுகள் பல அவ்வப்போது கண்டனம் தெரிவிப்பது உண்டு.உலக அமைதி கருதி ஈரான், ஈராக் உள்ளிட்ட பல நாடுகள்
ஒலியைவிட, 5 மடங்கு, வேகம், ஏவுகணை, சீனா சோதனை, அமெரிக்கா, வியப்பு,

பெய்ஜிங்: ஒலியைவிட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகம் உறுதி செய்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணு ஆராய்ச்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பில் மும்முரம் காட்டி வந்தது. இதற்கு உலக நாடுகள் பல அவ்வப்போது கண்டனம் தெரிவிப்பது உண்டு.


latest tamil news


உலக அமைதி கருதி ஈரான், ஈராக் உள்ளிட்ட பல நாடுகள் அளவுக்கு அதிகமாக அணு ஆயுத சோதனை மற்றும் யுரேனிய செரிவில் ஈடுபடக்கூடாது என்று ஐ.நா., எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா.,வின் வார்த்தைகளுக்கு அவ்வளவாக கட்டுப்படாத நாடுகளில் ஒன்றாகிய சீனா, கடந்த ஜூலை மாதத்தில் ஏவுகணை ஒன்றை விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளது.

ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்சானிக் கிளைட் வியகிள் என்று கூறப்படும் ஏவுகணை ஒன்றை தென் சீனக் கடலில் ஏவி சீனா சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கண்காணித்து உள்ளது. இந்த அதிநவீன சோதனையை சீனா எவ்வாறு வெற்றிகரமாக செய்துமுடித்தது? என அமெரிக்கா தற்போது வியந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X