சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடியாத்தம் அருகே சிறுத்தை தாக்கி 2 பேர் படுகாயம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
குடியாத்தம்: குடியாத்தம் அருகே, சிறுத்தை தாக்கி இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே அனந்தகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்திகுமார், 21, முரளிதரன், 24. இவர்கள் இன்று காலை 6:00 மணிக்கு அங்குள்ள காட்பாற்றில் வெள்ளநீரை பார்க்கச் சென்றனர். அப்போது புதர்மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று அவர்களை தாக்கியது.படுகாயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு

குடியாத்தம்: குடியாத்தம் அருகே, சிறுத்தை தாக்கி இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே அனந்தகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்திகுமார், 21, முரளிதரன், 24. இவர்கள் இன்று காலை 6:00 மணிக்கு அங்குள்ள காட்பாற்றில் வெள்ளநீரை பார்க்கச் சென்றனர். அப்போது புதர்மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று அவர்களை தாக்கியது.படுகாயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து குடியாத்தம் வனத்துறையினர் கூறியதாவது: தற்போது பெய்த மழையால் குடியாத்தம் பகுதியில் நீர் நிலைகள் நிறைந்துள்ளது. தமிழக- ஆந்திரா மாநிலத்தில், பலமனேர் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக சிறுத்தைகள் வந்து செல்கிறது. எனவே, வெள்ளநீரை பார்க்க செல்பவர்கள் சிறுத்தை உள்ளதா? என்பதையும் கவனித்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X