மோகா: பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கைப்பற்றினால், 18 வயதை கடந்த அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்காக டில்லி முதல்வரும் அக்கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மோகா பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 2022ம் ஆண்டு பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றினால், பஞ்சாபில் 18 வயதை கடந்த அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம். ஒரே குடும்பத்தில் மூன்று பெண்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

பஞ்சாபில் ஒரு போலி கெஜ்ரிவால் வலம் வருகிறார். நான் இங்கு என்ன வாக்குறுதி அளித்தாலும், அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். நாடு முழுவதும், கெஜ்ரிவால் என்ற ஒருவரால் மட்டுமே உங்கள் மின் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க முடியும். எனவே அந்த போலி கெஜ்ரிவாலிடம் ஜாக்கிரதையாக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE