ஜன்தன் வங்கிக் கணக்கில் கூடுதல் பரிமாற்றத்துக்கு ரூ.254 கோடி வசூல்: யார் பொறுப்பு என ராகுல் கேள்வி

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: ஜன்தன் வங்கிக் கணக்கில் கூடுதல் பரிமாற்றத்துக்காக ஸ்டேட் வங்கி ரூ.254 கோடி வசூலித்துள்ளது என்று அறிக்கை வெளியானது. இதை சுட்டிக்காட்டி இதற்கு யார் பொறுப்பு? என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.மும்பை ஐ.ஐ.டி., புள்ளியியல் பேராசிரியர் ஆஷிஸ் தாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஸ்டேட் வங்கி ஜன்தன் வங்கிக் கணக்குதாரர்களிடம் கடந்த
JANDAN BANK ACCOUNT, EXTRA, COLLECTION, ஜன்தன் வங்கி கணக்கு, கூடுதல் பரிமாற்றம், ரூ.254 கோடி வசூல், யார் பொறுப்பு, காங்கிரஸ் ராகுல் கேள்வி

புதுடில்லி: ஜன்தன் வங்கிக் கணக்கில் கூடுதல் பரிமாற்றத்துக்காக ஸ்டேட் வங்கி ரூ.254 கோடி வசூலித்துள்ளது என்று அறிக்கை வெளியானது. இதை சுட்டிக்காட்டி இதற்கு யார் பொறுப்பு? என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை ஐ.ஐ.டி., புள்ளியியல் பேராசிரியர் ஆஷிஸ் தாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஸ்டேட் வங்கி ஜன்தன் வங்கிக் கணக்குதாரர்களிடம் கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டுவரை 4 டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு மேல் செய்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.17.70 கட்டணம் விதித்துள்ளது. இதன் மூலம் ரூ.254 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.


latest tamil news


சாமானிய மக்களுக்கும் வங்கிக் கணக்கு வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியால் ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அதனால்தான் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை என்ற வசதியும், ரூபே டெபிட் கார்டு வசதியும் தரப்பட்டது. ஆனால், 4 டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு பின் வங்கி நிர்வாகம் கட்டணம் வசூலித்துள்ளது .

அதாவது ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் முதலில் 4 டிஜிட்டல் பரமாற்றத்துக்குக் கட்டணம் இல்லை. ஆனால், அதன்பின் 15 ரூபாய்க்கு ஏதேனும் பொருள் வாங்கி டிஜிட்டல் பரிமாற்றத்தில் அல்லது யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினால் 5வது பரிமாற்றத்திலிருந்து ஒவ்வொரு முறையும் ரூ.17.70 வசூலிக்கப்படும். ஜன்தன் வங்கிக் கணக்கிற்கு கட்டணம் வசூலித்து வங்கி விதிமுறையை மீறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளையும் மீறியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு செப்., வரை ரூ.254 கோடியை ஜன்தன் வங்கிக் கணக்குதாரர்களிடம் கூடுதல் பரிமாற்றத்துக்காக ஸ்டேட் வங்கி வசூலித்துள்ளது. இந்தப் பணத்தைத் திருப்பித் தர மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை ரூ.90 கோடி மட்டுமே ஸ்டேட் வங்கி, வங்கிக் கணக்குதாரர்களிடம் திருப்பி அளித்துள்ளது. அதில், ரூ.164 கோடி திரும்ப வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: ஜன்தன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைத்திருப்பவர்களுக்கு யார் பொறுப்பு?. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202109:14:03 IST Report Abuse
அப்புசாமி ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் தேச துரோகிகள் ஒழிக...
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
23-நவ-202108:43:21 IST Report Abuse
venkatan நியாயமான பிரச்சனை. நியாயமான கேள்வி.. திரு. ராகுல் அவர்கள் எப்போதாவதுதான் இந்த மாதிரி அறிவுபூர்வமாக பிரச்சனைகளை ப் பற்றிப்பேசுகிறார்..
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
23-நவ-202107:24:12 IST Report Abuse
Balaji ட்ரான்ஸாக்ஷன் பீ என்கிறது உண்மை செய்தி... க்ளீனர் செய்தி இதனை ஊழல் என்று செய்தி வாசிப்பு செய்கிறது... தங்கள் ஆதரவாளர்கள் அறிவே இல்லாதவர்கள் என்று நம்பும் அந்த ஊடகம்... உண்மையாகவே அது தான் நிலைமையோ என்னவோ... இருக்கலாம் .. யார் கண்டார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X