ஆந்திராவுக்கு 3 தலைநகர்; மசோதாவை திரும்பப் பெற்றார் முதல்வர் ஜெகன்மோகன்

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்களை ஏற்படுத்தும் மசோதாவை கடந்தாண்டு அறிமுகப்படுத்திய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தற்போது அம்மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர். காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில், மூன்று தலைநகரங்களை
Andhra Pradesh, Withdraws, 3 Capital Bill, Controversial Bill, ஆந்திரா, தலைநகரங்கள், மசோதா, வாபஸ்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்களை ஏற்படுத்தும் மசோதாவை கடந்தாண்டு அறிமுகப்படுத்திய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தற்போது அம்மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர். காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில், மூன்று தலைநகரங்களை ஏற்படுத்த, ஆந்திர அரசு திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் கருத்துகள் கேட்டு பெறப்பட்டன. அதன்படி, கர்னுால் நீதிமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் ஆட்சி தலைநகராகவும், அமராவதி சட்டசபை தலைநகராகவும் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

ஆந்திர அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் மத்திய அரசும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் பதில் அளித்த மத்திய அரசு, 'ஒரு மாநிலத்திற்கு தலைநகரம் அமைக்கும் முடிவு என்பது முழுக்க முழுக்க அந்த மாநில அரசு தொடர்புடையது. எனவே இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது,' எனக்கூறியது. ஆந்திர அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'ஆந்திராவுக்கு ஒரே ஒரு தலைநகராக அமராவதி மட்டுமே இருக்கும். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபையில் வெளியிடுவார்,' எனத் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இதனையடுத்து ஆந்திராவில் 3 தலைநகர்களை அமைக்கும் முடிவில் இருந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பின்வாங்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக இன்று (நவ.,22) சட்டசபையில் பேசிய ஜெகன்மோகன், 'ஆந்திரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில், மூன்று தலைநகரங்களை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என கருதினோம். அரசாங்கம் முன்பு அறிமுகப்படுத்திய மசோதாவை திரும்பப் பெறுகிறோம். எந்த குறையும் இல்லாத பிழையில்லாத புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவோம்,' எனக் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
23-நவ-202108:48:25 IST Report Abuse
venkatan Sometimes the boys play lavishly in politics without any logical reasoning in economics and public administration.The willful effects are very disastrous.
Rate this:
Cancel
chinnakaruppan - natham,இந்தியா
22-நவ-202121:54:40 IST Report Abuse
chinnakaruppan இதேபோல் இங்கே ஒரு கோமாளி (சீமான்) சொல்லி கொண்டு அலைகிறார்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
22-நவ-202120:45:24 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN விடியல் அரசும் இது போல பல்டியடிக்க துவங்கிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X