அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் வழங்கும் அரசாக இருக்கும்: திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூரில் நலத்திட்ட பணிகள், உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (நவ.22) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட

திருப்பூர்: திருப்பூரில் நலத்திட்ட பணிகள், உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.



latest tamil news



திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (நவ.22) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 1339 பேருக்கு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதியுதவி, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்பட 21 துறைகளின் சார்பில் 4 ஆயிரத்து 335 பேருக்கு ரூ.55 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


மின்வாரியத்துறை சார்பில் தெற்கு அவினாசி பாளையம், கே.அய்யம் பாளையம், சின்னே கவுண்டன்பாளையம் துணைமின்நிலையம், புதுராமகிருஷ்ணாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாராபுரம் கால்நடை மருத்துவமனை பள்ளிக்கட்டிடங்கள் உள்பட ரூ.28 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக ரூ.41 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கொழுமங்குழி ஊராட்சி மன்ற கட்டிடம், மாம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ..56கோடியே 29 லட்சத்து 24ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார்.விழாவில் ஸ்டாலின் பேசுகையில், இந்த அரசு அடையாளத்திற்காக 10 பேருக்கு மட்டும் வழங்கும் அரசாக இருக்காது. அனைவருக்கும் வழங்கும் அரசாக இருக்கும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202107:37:16 IST Report Abuse
அப்புசாமி அரிசிக் கார்டு வெச்சிருப்பவங்க சொந்த வீடு, காரெல்லாம் வெச்சுக்கிட்டிருக்காங்க. ரேஷன் அரிசியை வேற யாருக்கோ குடுத்துட்டு வேலை வங்கிக்கறாங்கோ. கை நிறைய பென்சன் வாங்குறாங்கோ. அவிங்களுக்குத் தான் இன்னும் நலத்திட்டங்கள், பரிசுத் தொகுப்பு எல்லாம். இது மாதிரி ஒரு ஃப்ராட் மாநிலம், அரசு எங்கேயும் பார்த்ததில்லை.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-நவ-202106:11:53 IST Report Abuse
Mani . V அனைவருக்கும் இலவச நலத்திட்டங்களை அளித்து, உழைக்காத சோம்பேறிகளாக்கி, எப்பொழுதுமே பிச்சை எடுக்க வைப்போம்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
23-நவ-202104:13:50 IST Report Abuse
meenakshisundaram அதெல்லாம் வாணாம், முதல்லே அரசு ஊழியர் ஆசிரியருக்கு உண்டான 'பஞ்சப்படியை சரியாக கொடுக்க பாருங்க அப்புறம் (?) எல்லோருக்கும் எல்லாமும் செய்யுங்க -நான் சொல்வது 'மக்களுக்கு ' கூட்டணி கட்சிகளுக்கு அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X