அனைவருக்கும் வழங்கும் அரசாக இருக்கும்: திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் வழங்கும் அரசாக இருக்கும்: திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (31)
Share
திருப்பூர்: திருப்பூரில் நலத்திட்ட பணிகள், உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (நவ.22) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட

திருப்பூர்: திருப்பூரில் நலத்திட்ட பணிகள், உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.



latest tamil news



திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (நவ.22) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 1339 பேருக்கு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதியுதவி, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்பட 21 துறைகளின் சார்பில் 4 ஆயிரத்து 335 பேருக்கு ரூ.55 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


மின்வாரியத்துறை சார்பில் தெற்கு அவினாசி பாளையம், கே.அய்யம் பாளையம், சின்னே கவுண்டன்பாளையம் துணைமின்நிலையம், புதுராமகிருஷ்ணாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாராபுரம் கால்நடை மருத்துவமனை பள்ளிக்கட்டிடங்கள் உள்பட ரூ.28 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக ரூ.41 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கொழுமங்குழி ஊராட்சி மன்ற கட்டிடம், மாம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ..56கோடியே 29 லட்சத்து 24ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார்.விழாவில் ஸ்டாலின் பேசுகையில், இந்த அரசு அடையாளத்திற்காக 10 பேருக்கு மட்டும் வழங்கும் அரசாக இருக்காது. அனைவருக்கும் வழங்கும் அரசாக இருக்கும் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X