பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்: 32,319 பேர் பங்கேற்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை ஒன்பது மெகா தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. அதில், நான்கு லட்சத்து, 207 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர். இந்நிலையில் நேற்று, 10ம் கட்டமாக, அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை ஒன்பது மெகா தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. அதில், நான்கு லட்சத்து, 207 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர். இந்நிலையில் நேற்று, 10ம் கட்டமாக, அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் என, மொத்தம், 740 முகாம்களில், காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள், 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று, ஒரே நாளில், 32 ஆயிரத்து, 319 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X