பொது செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்து அரசர் பெருவிழா கோலாகலம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் நகரில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், கிறிஸ்து அரசர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 14ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப், கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து, தினமும், நவநாள் திருப்பலி நடந்தது.

நாமக்கல்: நாமக்கல் நகரில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், கிறிஸ்து அரசர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 14ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப், கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து, தினமும், நவநாள் திருப்பலி நடந்தது. இறுதி நாளான நேற்று, காலையில், சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. அதில், நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள் சுந்தர் தலைமையில், திருவிழா திருப்பலியும், தேவாலய வளாகத்திற்குள், கிறிஸ்து அரசர் அலங்கரிக்கப்பட்ட மின்தேர்பவனியும் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பங்குதந்தை ஜான் அல்போன்ஸ் , பிரான்சீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X