தொடர் மழையிலும் நிரம்பாத நீர்நிலைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையிலும் நிரம்பாத நீர்நிலைகள்

Added : நவ 22, 2021
Share
நா.பேட்டை: தொடர் மழையிலும் நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பவில்லை. தமிழகத்தில் கடந்த, 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில்தான் அதிகபட்ச மழை பதிவாகியிருந்தது. ராசிபுரத்தில் சந்திரசேகரபுரம் பகுதியில் உள்ள பல கிணறுகளில் தண்ணீர் வழிந்து வெளியே சென்றது. ஆனால், நாமகிரிப்பேட்டையில் உள்ள

நா.பேட்டை: தொடர் மழையிலும் நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பவில்லை. தமிழகத்தில் கடந்த, 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில்தான் அதிகபட்ச மழை பதிவாகியிருந்தது. ராசிபுரத்தில் சந்திரசேகரபுரம் பகுதியில் உள்ள பல கிணறுகளில் தண்ணீர் வழிந்து வெளியே சென்றது. ஆனால், நாமகிரிப்பேட்டையில் உள்ள அரியாகவுண்டம்பட்டி, அக்லாம்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட ஏரிகளில் குறிப்பிடத்தக்க வகையில் கூட தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. முக்கியமாக இப்பகுதியில்தான் பசிறுமலை, போதமலை, கொல்லிமலை அடிவாரப்பகுதிகள் உள்ளன. அப்படி இருந்தும் இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வராததிற்கு முக்கிய காரணம், நீர் பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான் என, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி, சீராப்பள்ளி பகுதி ஏரிகளுக்கு வருகின்ற நீர்வழிக்கால்வாய்கள் பெரும்பாலும் தற்போது அழிந்துவிட்டன. இதனால், எவ்வளவு மழை பெய்தாலும், இந்த ஏரிகளுக்கு பாதியளவு கூட தண்ணீர் வருவதே இல்லை. எனவே, வருவாய்துறையினர் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X