பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியின் கடக்கால் உடைத்து தண்ணீர் வெளியேற்றம்; விவசாயிகள் போராட்டம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பெரியகுளம் ஏரியின் கடக்கால் பகுதியை உடைத்து நீரை வெளியேற்றியவர்களை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.சேந்தமங்கலம் அடுத்த பெரியகுளம் பஞ்., பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் ஏரி உள்ளது. ஒரு மாதமாக கொல்லிமலை, காரவள்ளி பகுதிகளில் கனமழை பெய்ததால், பெரியகுளம் ஏரி நிரம்பியது. இந்நிலையில், தனிநபர் ஒருவரின் நிலத்தில்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பெரியகுளம் ஏரியின் கடக்கால் பகுதியை உடைத்து நீரை வெளியேற்றியவர்களை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


சேந்தமங்கலம் அடுத்த பெரியகுளம் பஞ்., பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் ஏரி உள்ளது. ஒரு மாதமாக கொல்லிமலை, காரவள்ளி பகுதிகளில் கனமழை பெய்ததால், பெரியகுளம் ஏரி நிரம்பியது. இந்நிலையில், தனிநபர் ஒருவரின் நிலத்தில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, பெரியகுளம் ஏரியின் நீர் மட்டத்தை குறைக்கும் வகையில், ஏரியின் வடிகால் பகுதியான கடக்காலில் உள்ள கான்கிரீட்டை மர்ம நபர்கள் சிலர் உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதையடுத்து பெரியகுளம் ஏரி நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. விவசாயிகள், பெரியகுளம் ஏரிக்கு நேற்று காலை சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் சிலரால் கடக்கால் பகுதி கான்கிரீட் உடைத்திருந்தது தெரியவந்தது. பின்னர், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடக்கால் பகுதி சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சம்பவ இடத்துக்கு வந்த பொதுப்பணித்துறை உதவிபொறியாளர் யுவராஜ், ராஜாராம், சரபங்கா வடிநில உபகோட்டம் உதவிசெயற்பொறியாளர் செந்தில்குமார், தாசில்தார் சுரேஷ், இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடைக்கப்பட்ட கான்கிரீட் கடக்கால் பகுதியில், மணல் மூட்டைகளை வைத்து வெளியேறிய தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X