பொது செய்தி

தமிழ்நாடு

பசு மாடு இறந்த பின் நடந்த கால்நடை மருத்துவ முகாம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பசு மாடு இறந்த பின், கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசை சேர்ந்தவர் சேகர், 47, விவசாயி. இவர் வளர்த்து வந்த பசுமாடு மர்ம நோய் தாக்குதலால் இரு நாட்களுக்கு முன்பு இறந்தது. இதன் பின் இப்பகுதியில் மர்ம நோய் தாக்குதல் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு பரவி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பசு மாடு இறந்த பின், கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசை சேர்ந்தவர் சேகர், 47, விவசாயி. இவர் வளர்த்து வந்த பசுமாடு மர்ம நோய் தாக்குதலால் இரு நாட்களுக்கு முன்பு இறந்தது. இதன் பின் இப்பகுதியில் மர்ம நோய் தாக்குதல் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு பரவி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட கால்நடை துறை சார்பில், சிறப்பு சிகிச்சை முகாம் வீ.மேட்டூரில் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பசு, மாடுகள் உள்ளிட்டவைகளுக்கு உரிய சிகிச்சை, 33 இளங்கன்றுகள், 126 ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் பொன்னுவேல், திருச்செங்கோடு கோட்ட உதவி இயக்குனர் அருண்பாலாஜி அறிவுரைப்படி, முகாமில் கலந்து கொண்ட கால்நடை வளர்ப்போருக்கு மழைக்கால நோய் தடுப்பு வழிமுறைகள், கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கை, மரபுசார் மருத்துவ குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மேலும் கறவை மாடுகளுக்கு தேவையான சத்துக்கள் அடங்கிய தாது உப்புக்கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X