பூட்டை உடைத்து பணம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டை உடைத்து பணம் திருட்டு

Added : நவ 22, 2021
Share
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மெக்கானிக் கடையில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. குமாரபாளையம், தீயணைப்பு நிலையம் அருகே மெக்கானிக் கடை வைத்துள்ளவர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ஜகன்னாதன், 38. இவரது கடைக்கு அருகில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருபவர் தங்கமணி, 57. இரு கடைகளின் அருகில் பேக்கரி உள்ளது. நேற்று காலை, 7:00 மணியளவில் இங்கு டீ குடிக்க வந்தவர்கள் இரு கடைகளின் பூட்டு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மெக்கானிக் கடையில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. குமாரபாளையம், தீயணைப்பு நிலையம் அருகே மெக்கானிக் கடை வைத்துள்ளவர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ஜகன்னாதன், 38. இவரது கடைக்கு அருகில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருபவர் தங்கமணி, 57. இரு கடைகளின் அருகில் பேக்கரி உள்ளது. நேற்று காலை, 7:00 மணியளவில் இங்கு டீ குடிக்க வந்தவர்கள் இரு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு வெளியில் கிடந்தது குறித்து, அந்தந்த கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தன் கடையில், 45 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக ஜகன்னாதன் கூறினார். தட்டச்சு கடையில் பணம் எதுவும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை. குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X