வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி

Added : நவ 22, 2021
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், வரகூர்கோம்பை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், புதிய வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை கட்டப்படவில்லை.

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், வரகூர்கோம்பை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், புதிய வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை கட்டப்படவில்லை. பள்ளியில் இரு வகுப்பறை மட்டுமே உள்ளதால் ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாமல், கோவில் வளாகத்திலும், மரத்தடியிலும் பாடம் நடத்தி வருகின்றனர். மழை வரும்போது மாணவ, மாணவியர் இரு வகுப்பறையிலேயே உட்கார வைக்கும் அவலம் உள்ளது. இது குறித்து பெற்றோர் கூறுகையில், 'கூடுதல் வகுப்பறை கேட்டு, பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X