பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு; பஞ்சப்பட்டியில் 19.2 மி.மீ., மழை பதிவு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று, 69 ஆயிரம் கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில், 65 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானி சாகர், அமராவதி மற்றும் நொய்யல் ஆற்றின் தண்ணீரும், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் கலக்கிறது. இதனால், கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு, கடந்த சில நாட்களாக அதிகரித்தது.

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று, 69 ஆயிரம் கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில், 65 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானி சாகர், அமராவதி மற்றும் நொய்யல் ஆற்றின் தண்ணீரும், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் கலக்கிறது. இதனால், கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு, கடந்த சில நாட்களாக அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 72 ஆயிரத்து, 331 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 69 ஆயிரத்து, 910 கன அடியாக குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மழை காரணமாக நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கதவணை பகுதியில், 2.5 மி.மீ., மழை பெய்துள்ளது.


அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம், 1,304 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 1,009 கன அடியாக வரத்து குறைந்தது. அமராவதி ஆற்றில், 888 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 113 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 88.13 அடியாக இருந்தது. மழை காரணமாக, கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 2,174 கன அடி தண்ணீர் வந்தது.

ஆத்துப்பாளையம் அணை நிலவரம்: க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 80 கன அடி தண்ணீர் வந்தது. நொய்யல் வாய்க்காலில், 95 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.72 அடியாக இருந்தது.

கரூர் மாவட்ட மழை நிலவரம்: நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,): கரூர், 7.2, குளித்தலை, 2, தோகைமலை, 4, கிருஷ்ணராயபுரம், 5.2, மாயனூர், 2.5, பஞ்சப்பட்டி, 19.2, ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 3.34 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கரூர் அருகே காந்தி கிராமம் பகுதியில் நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, வேப்ப மரங்கள் சாய்ந்து விழுந்தன. அரசு மருத்துவ கல்லூரி பகுதியில் மழை நீர் தேங்கிநின்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X