பொது செய்தி

தமிழ்நாடு

கத்தரி, தக்காளி விலை முன்னறிவிப்பு: கோவை வேளாண் பல்கலை தகவல்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கரூர்: கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி ஆகியவற்றின் விலை முன்னறிவிப்பு குறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் சார்பில் (கோவை) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறியுள்ளதாவது: தேசிய தோட்டக்கலை வாரியத்தின், இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2020-21ல் இந்தியாவில், 16 லட்சத்து, 7,500 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கரூர்: கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி ஆகியவற்றின் விலை முன்னறிவிப்பு குறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் சார்பில் (கோவை) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


அதில் கூறியுள்ளதாவது: தேசிய தோட்டக்கலை வாரியத்தின், இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2020-21ல் இந்தியாவில், 16 லட்சத்து, 7,500 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இரண்டு கோடியே, 10 லட்சத்து, 3,000 டன் தக்காளி அறுவடை செய்யப்பட்டுள்ளது. கத்தரிக்காய், 11 லட்சத்து, 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, ஒரு கோடியே, 31 லட்சத்து, 54 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெண்டைக்காய், ஏழு லட்சத்து, 75 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, 19 ஆயிரம் டன் அறுவடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க வசதியாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம், கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் விலை மற்றும் சந்தையை ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, தரமான கத்தரிக்காய் பண்ணை விலை கிலோ, 25 முதல் 27 ரூபாய்; தக்காளி, 35 முதல், 40 ரூபாய்; வெண்டைக்காய், 20 முதல், 22 ரூபாய் வரை இருக்கும். வடகிழக்கு பருவமழையை பொறுத்து, காய்கறிகள் விலையில் மாற்றம் இருக்கும். மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X