சேதமடைந்துள்ள சின்டெக்ஸ் தொட்டி| Dinamalar

சேதமடைந்துள்ள சின்டெக்ஸ் தொட்டி

Added : நவ 22, 2021
Share
கரூர்: கரூர் அம்மன் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உபயோகமாக இருந்தது. தற்போது சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள குழாய்கள் உடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் போர்வெல் குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரமாகிறது. தொட்டி உள்ள சிமென்ட் மேடையிலும் விரிசல்

கரூர்: கரூர் அம்மன் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உபயோகமாக இருந்தது. தற்போது சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள குழாய்கள் உடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் போர்வெல் குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரமாகிறது. தொட்டி உள்ள சிமென்ட் மேடையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, போர்வெல் குழாயை சீரமைத்து, புதிதாக சின்டெக்ஸ் தொட்டி வைக்க வேண்டும். மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள போர்வெல் குழாய்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X