நாய்களை கட்டுப்படுத்த மக்கள் வேண்டுகோள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அரவக்குறிச்சி தர்ஹாதெரு, மாரியம்மன்கோவில் தெரு, ஜீவாநகர், பள்ளிவாசல் தெரு, பாவா நகர், பொன் நகர், மார்க்கெட் தெரு, பெரியகடை வீதி, அய்யாவு நகர், கேர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்லும்போது நாய்கள்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அரவக்குறிச்சி தர்ஹாதெரு, மாரியம்மன்கோவில் தெரு, ஜீவாநகர், பள்ளிவாசல் தெரு, பாவா நகர், பொன் நகர், மார்க்கெட் தெரு, பெரியகடை வீதி, அய்யாவு நகர், கேர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்லும்போது நாய்கள் சத்தத்துடன் திடீரென்று துரத்துகின்றன. அவர்கள் அலறியடித்து ஓடி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாலை நேரங்களில் பள்ளி விட்டு வரும் மாணவ, மாணவியர் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர். சிலரை கடித்து விடவும் செய்கின்றன. மக்கள் தெருவில் நடமாட அச்சப்படும் வகையில், அதிகரித்துள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை முகாம் நடத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X