சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

வயிற்றெரிச்சல் கோஷ்டி!

Added : நவ 22, 2021
Share
Advertisement
வயிற்றெரிச்சல் கோஷ்டி!'அடுத்து பறிபோகும் பதவி இவருடையது தான்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்' என, மத்திய விவசாயத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நரேந்திர சிங் தோமர் பற்றி அடித்துக் கூறுகின்றனர், டில்லி அரசியல்வாதிகள். பா.ஜ., மேலிடம் எப்போதுமே அதிரடி நடவடிக்கைகளுக்கு தயங்காது. கட்சியில் எவ்வளவு மூத்த தலைவராக இருந்தாலும், சரியாக செயல்படாவிட்டால்

அக்கம் பக்கம்


வயிற்றெரிச்சல் கோஷ்டி!



'அடுத்து பறிபோகும் பதவி இவருடையது தான்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்' என, மத்திய விவசாயத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நரேந்திர சிங் தோமர் பற்றி அடித்துக் கூறுகின்றனர், டில்லி அரசியல்வாதிகள். பா.ஜ., மேலிடம் எப்போதுமே அதிரடி நடவடிக்கைகளுக்கு தயங்காது. கட்சியில் எவ்வளவு மூத்த தலைவராக இருந்தாலும், சரியாக செயல்படாவிட்டால் துாக்கி அடித்து விடுவர். இதற்கு, 'லேட்டஸ்ட்' உதாரணம், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. பா.ஜ.,வில் செல்வாக்கு மிக்கவர்கள் என கூறப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன் போன்றவர்களின் அமைச்சர் பதவி, சமீபத்தில் பறிக்கப்
பட்டது. இந்த பட்டியலில் கூடிய விரைவில் நரேந்திர சிங் தோமரும் இடம் பெற்று விடுவார் என, டில்லியில் பேச்சு அடிபடுகிறது. விவசாய சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் தீவிரமடைந்ததும், அதன் காரணமாக தற்போது அந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதும், பிரதமர் மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக, பா.ஜ.,வில் ஒரு தரப்பினர்
கூறுகின்றனர். 'விவசாய அமைச்சரான தோமர் சரியாக செயல்படாமல் சொதப்பி விட்டார்' என, அவரை நோக்கி கைகாட்டுகின்றனர். நரேந்திர சிங் தோமரோ, 'மோடிக்கு விசுவாசமானவன் நான். அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து பல செல்வாக்கான துறைகளை வகித்து வருகிறேன். வயிற்றெரிச்சல் கோஷ்டி தான், இப்படி வதந்தியை பரப்பி வருகிறது' என, துணிச்சலுடன் வலம் வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X