சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரியே கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது, போலீஸ் துறைக்கு விடப்பட்ட சவால். இத்தகைய செயல்கள் தடுக்கப்படா விட்டால் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விடும்.'டவுட்' தனபாலு: தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாள் முதல், காவல் நிலையங்கள் கறை வேட்டிக்காரர்களின் கட்டப்பஞ்சாயத்து

'டவுட்' தனபாலு

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரியே கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது, போலீஸ் துறைக்கு விடப்பட்ட சவால். இத்தகைய செயல்கள் தடுக்கப்படா விட்டால் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விடும்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாள் முதல், காவல் நிலையங்கள் கறை வேட்டிக்காரர்களின் கட்டப்பஞ்சாயத்து இடமாக மாறி விட்டது என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. குற்றவாளிகளால் போலீஸ் அதிகாரியே கொடூரமாக கொல்லப்பட்ட பிறகாவது, தமிழக காவல் துறையினர் விழிப்படைந்து, சட்டப்படி செயல்பட்டு, சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவரோ என்ற, 'டவுட்' ஏற்பட்டுள்ளது!


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
'நீட்' தேர்வு மற்றும் வேளாண் சட்டங்களை ஒப்பிட முடியாது. நீட் தேர்வு பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக, எதிர்க்கட்சிகள், நீட் விஷயத்தை விடாமல் முயற்சிக்கின்றன. ஆண்டுதோறும் நீட் பிரச்னையை கையில் எடுத்து, அதன் வாயிலாக அரசியல் ஆதாயத்தை தேடும், தி.மு.க., அரசு, இந்த நாடகத்தை கைவிட வேண்டும்.

'டவுட்' தனபாலு: டில்லி அருகே ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதால், தமிழகத்தில் மாணவர்களை துாண்டி விட்டு, தொடர்ந்து போராட்டம் நடத்தச் செய்து, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வைப்பரோ என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு வந்துள்ளது. ஏனெனில், அரசியல் லாபத்திற்காக எதையும் செய்வர், நம் கட்சித் தலைவர்கள்!


பத்திரிகை செய்தி
: சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் அறிவிப்பை,- சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

'டவுட்' தனபாலு: தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை பார்க்கும் போது, தங்கள் தீர்மானத்தை வலியுறுத்தி, வரும் 29ல் கூட உள்ள பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள் பெரிய அளவில் அமளியில் ஈடுபடுவரோ என்ற, 'டவுட்' வருகிறது. அதன் மூலம் விவசாயிகளின் காவலன் தங்கள் கட்சி என காட்ட முற்படுவரோ என்ற, 'டவுட்டும்' வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-நவ-202119:22:37 IST Report Abuse
D.Ambujavalli சட்டம், ஒழுங்கு நிலை, காவலரையே கொலை செய்யுமளவு 'முன்னேறிய' பிறகும் அத்துறையின் அமைச்சரான முதல்வர் 'ஒரு கோடி, அரசு வேலை' என மழுப்பாமல், தங்கள் க்கட்சியினரைக் கட்டிக்காப்பதை விட்டு, கடும் நடவடிக்கை எடுத்தால்தான் காவல்துறையினர் துணிந்து பணிசெய்ய இயலும்
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
23-நவ-202107:11:57 IST Report Abuse
P Sundaramurthy இலவசங்கள், திறமையற்றவருக்கு கல்வியில் முன்னுரிமை, வேலைவாய்ப்பு தரும் ஒதுக்கீடுகள், பொதுவுடைமை சித்தாந்தம், துருப்பிடித்த நிர்வாகம், ஓட்டு வங்கி அரசியல் ...வேறென்ன நடக்கும். மனித உரிமை, மண்ணாங்கட்டி என்று உடல் அமைப்பை வைத்து மனிதனாக பார்க்காமல் கடுமையான உடனடி தண்டனை நிகழவேண்டும் .
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
23-நவ-202106:36:10 IST Report Abuse
rajan அரசியல் லாபத்திற்காக எதையும் செய்வர் மோடி பதினைந்து லட்சம் பணமதிப்பிழப்பீடு ஐம்பதுநாளில் பிரச்சினைக்கு தீர்வு விவசாய போராட்டம் இன்னும் பல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X