சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 22, 2021
Share
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: என்னை பார்க்கும் போது கட்சியினருக்கு உற்சாகம் வருகிறது. ஆனால், அது ஓட்டாக மாறுவதில்லை. அது ஏன் என தெரியவில்லை. 42 ஆண்டுகளாக உங்களுடன் பயணிக்கும் என் மீதான குற்றமா அல்லது பொறுப்பாளர்கள் குற்றமா என்பதை கண்டறிய வேண்டும்.தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக வர வேண்டிய கட்சி உங்களுடையது. எனினும், தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்து தான் போகிறது;

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: என்னை பார்க்கும் போது கட்சியினருக்கு உற்சாகம் வருகிறது. ஆனால், அது ஓட்டாக மாறுவதில்லை. அது ஏன் என தெரியவில்லை. 42 ஆண்டுகளாக உங்களுடன் பயணிக்கும் என் மீதான குற்றமா அல்லது பொறுப்பாளர்கள் குற்றமா என்பதை கண்டறிய வேண்டும்.தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக வர வேண்டிய கட்சி உங்களுடையது. எனினும், தேர்தலுக்கு தேர்தல் தேய்ந்து தான் போகிறது; திட்டங்கள், கொள்கைகளும் சிறப்பாகத் தான் இருக்கின்றன. கோளாறு, முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் இருக்குமோ!


தி.மு.க., மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி., அறிக்கை:
பாலியல் தொல்லை காரணமாக கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை குழந்தைகள் எதிர்க்கவும், அச்ச உணர்வுமின்றி புகார் கூறவும் பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.சமீப காலமாக அதிகரித்துள்ள இந்த சமூக சீர்கேடுக்கு, உங்களைப் போன்ற பெண்ணியவாதிகளும், அதிகாரம் படைத்த மக்கள் பிரதிநிதிகளும் வெறும் இரங்கல் மட்டும் தெரிவித்து செல்வது சரி தானா... இந்த கோளாறை, அடிமட்டத்திலிருந்து சரி செய்ய வேண்டாமா?


புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு:
ஜாதி, மத, மொழி, இன பிரச்னையை துாண்டும், ஜெய் பீம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்.கடந்த 6ல் அந்த படம் இணையதளத்தில் வெளியானது. அது முதல், அனைத்து அரசியல் தலைவர்களும் கொடுத்த, 'பப்ளிசிட்டி'யில் அந்த படம் கோடிகளை குவித்து விட்டது. இனிமேல் தடை செய்தாலும், பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு வராது!


தே.மு.தி.க., தலைவர், நடிகர் விஜயகாந்த் அறிக்கை:
பாடங்கள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், நேரடி தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது. எனவே, கல்லுாரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை, 'ஆன்லைன்' முறையிலேயே நடத்த வேண்டும்.ஆனால், அமைச்சர் பொன்முடி, 'முடியாது' என கூறி, தேர்வை சற்று தள்ளி வைத்து விட்டாரே... இனிமேல் மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதை தவிர வேறு வழியில்லையே!


அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
கொரோனா நேரத்தில், பல மாநிலங்களில் அரசு டாக்டர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால், தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. எனவே, அரசு டாக்டர்களின் தொகுப்பு நிதி கோரிக்கையை ஏற்றது போல, தமிழக அரசு இதையும் செய்ய வேண்டும்.அரசு டாக்டர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தால் தான், ஏழை நோயாளிகளுக்கு அவர்கள் தரமான சிகிச்சை அளிப்பர். அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை அளிப்பது தான், இந்த தொற்று காலத்தில்சரியானதாக இருக்கும்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X