இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 22, 2021
Share
நவ., 23, 1926ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில், 1926 நவம்பர் 23ல் பிறந்தவர், சத்யநாராயண ராஜு. தன்னை, 'ஷீரடி சாய் பாபாவின் அவதாரம்' என அறிவித்தார்; அன்றிலிருந்து, 'சத்ய சாய் பாபா' என அழைக்கப்பட்டார்.புட்டபர்த்தியில், 'பிரசாந்தி நிலையம்' என்ற ஆசிரமம் கட்டினார். 'சத்ய சாய்' அறக்கட்டளை மூலம், நாடு முழுதும் கோவில், கல்வி நிறுவனம், மருத்துவமனை ஆகியவற்றை நிறுவினார். உலகம்
 இதே நாளில் அன்று


நவ., 23, 1926



ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில், 1926 நவம்பர் 23ல் பிறந்தவர், சத்யநாராயண ராஜு. தன்னை, 'ஷீரடி சாய் பாபாவின் அவதாரம்' என அறிவித்தார்; அன்றிலிருந்து, 'சத்ய சாய் பாபா' என அழைக்கப்பட்டார்.புட்டபர்த்தியில், 'பிரசாந்தி நிலையம்' என்ற ஆசிரமம் கட்டினார். 'சத்ய சாய்' அறக்கட்டளை மூலம், நாடு முழுதும் கோவில், கல்வி நிறுவனம், மருத்துவமனை ஆகியவற்றை நிறுவினார். உலகம் முழுதும், 136 நாடுகளில், 1,300 சேவை மையங்களை உருவாக்கினார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட, 33 நாடுகளில் இலவச பள்ளிக்கூடம் துவங்கினார்.ராயலசீமாவில், 12 லட்சம் பேர் பயன்பெறும் வகையில், 'மெகா' குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை, சென்னைக்கு கொண்டு வரும், 'தெலுங்கு கங்கை' திட்டத்துக்கு கால்வாய் கட்ட, 200 கோடி ரூபாய் வழங்கினார். 2011 ஏப்ரல் 24ல், தன் 85வது
வயதில் இயற்கை எய்தினார்.சத்ய சாய் பாபா பிறந்த நாள் இன்று!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X