சுரங்க ரயில்
ஜப்பானின் டிசுகரு நீரிணையில் சுரங்க ரயில் பாதை கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 53.85 கி.மீ. இதில் 23.3 கி.மீ., துாரம் கடலின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இரட்டை ரயில் பாதையான இது, கடல் மட்டத்தில் இருந்து 790 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட உலகின் நீளமான சுரங்க ரயில்பாதை என அழைக்கப்படுகிறது. மேலும் சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்ட 'கத்தோர்டு பேஸ் சுரங்க ரயில்பாதை'க்கு (57.09 கி.மீ.) அடுத்து, உலகின் இரண்டாவது நீளமான ரயில் பாதையாக உள்ளது.
தகவல் சுரங்கம்
ஆழமான ஏரி
ரஷ்யாவின் சிபெரியாவில் உள்ள 'பைகால் ஏரி' உலகின் ஆழமான ஏரி என அழைக்கப்படுகிறது. இதன் சராசரி ஆழம் 2442 அடி. அதிகபட்ச ஆழம் 5387 அடி. உலகில் அதிகளவு நன்னீர் கொண்ட ஏரியாக திகழ்கிறது. இது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. இதனால் உலகின் பழமையான ஏரி எனப்படுகிறது. 1996ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது. இங்கு குறைந்த வெப்பநிலை மைனஸ் 19 டிகிரி செல்சியஸ் - அதிக வெப்பநிலை
14 டிகிரி செல்சியஸ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE