மான்களுக்காக 50 ஏக்கரை விட்டுள்ளேன்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

மான்களுக்காக 50 ஏக்கரை விட்டுள்ளேன்!

Added : நவ 22, 2021 | கருத்துகள் (2)
Share
புள்ளி மான்கள், பறவைகள் இஷ்டம் போல சுற்றி வர, தன் சொந்த நிலத்தை விட்டுக் கொடுத்துள்ளது குறித்து கூறும், கோவை அவிநாசி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி, 70: இருபது ஆண்டுகளுக்கு முன், என் நிலத்தில் உள்ள புற்களை மேய வந்த புள்ளி மான்களைக் கண்டேன்; அவற்றை விரட்டத் தோன்றவில்லை. இதையடுத்து, என்னிடம் இருந்த 60 ஏக்கர் நிலத்தில், 10 ஏக்கர் நிலத்தை மட்டும் பயிர்
சொல்கிறார்கள்

புள்ளி மான்கள், பறவைகள் இஷ்டம் போல சுற்றி வர, தன் சொந்த நிலத்தை விட்டுக் கொடுத்துள்ளது குறித்து கூறும், கோவை அவிநாசி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி, 70: இருபது ஆண்டுகளுக்கு முன், என் நிலத்தில் உள்ள புற்களை மேய வந்த புள்ளி மான்களைக் கண்டேன்; அவற்றை விரட்டத் தோன்றவில்லை. இதையடுத்து, என்னிடம் இருந்த 60 ஏக்கர் நிலத்தில், 10 ஏக்கர் நிலத்தை மட்டும் பயிர் செய்ய பயன்படுத்தி, மீதி 50 ஏக்கர் நிலத்தை மான்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டேன். புற்களை மேயத் தடை இல்லை என்று தெரிந்ததும் மான்கள் அங்கேயே வாழ ஆரம்பித்தன. இப்போது புள்ளி மான்கள் இனப் பெருக்கம் செய்து, 1,800 மான்கள் இந்த நிலத்தை அலங்கரிக்கின்றன.அமைதியான சூழ்நிலை, பசுமைப் போர்வை, ஆடு, மாடுகள் மேய்வதற்கு ஏற்ற புதர்கள், சிறு சிறு மரங்கள், புற்கள் என் நிலத்தில் உள்ளது மான்களுக்குப் பிடித்து போய் இருக்க வேண்டும்.ஆடுகள், மாடுகளுடன், மான்களும் சேர்ந்து வாழ்வதில் எந்த பிரச்னையும் எழவில்லை; பரஸ்பரம் நட்பாகவே இருந்து வருகின்றன. ஆற்றில் தண்ணீர் வரும் மாதங்கள் போக கோடைக் காலத்தில் மான்கள் தண்ணீர் குடிக்க குட்டைகள் வெட்டி, அதில் தண்ணீரை நிரப்புவேன்.எண்ணிக்கை கூடியதால் மான்கள் பக்கத்து வயல்களுக்கும் சென்று மேய ஆரம்பித்தன. துவக்கத்தில் சக விவசாயிகள் ஒன்றும் சொல்லவில்லை. இப்போது மான்களால் விவசாயம் பாதிப்படைகிறது; பயிர்கள் அழிகின்றன என்று புகார்கள் எழுகின்றன. மான்களை காடுகளுக்கு அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சொல்கின்றனர். வனத் துறை இந்த கோரிக்கையை பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.காலம் மாற மாமிசத்திற்காகவும், தோலுக்காகவும் மான்களைப் பிடிக்க மனிதர்களும் இறங்கியுள்ளனர். மான் வேட்டைகாரர்களை காவல் துறையினர் பிடித்துள்ளனர். மான்கள் தங்கள் வயலுக்குள் வராமல் தடுக்க, சில விவசாயிகள் நாய்களை வளர்க்கின்றனர். அந்த நாய்கள் மான்களைக் கடித்துக் குதறிவிடுகின்றன. சில மான்கள் செத்துவிடும். கடிபட்ட மான்களுக்கு சிகிச்சை அளிக்கிறேன். விரட்டும் நாய்க்குப் பயந்து அவசரத்தில் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு மான்கள் சாகும்.என் வயலில் மான்களுடன், 50 வகையான பறவைகள், மயில்கள், முயல்கள், பூனை, கீரிகள், உடும்புகள், எறும்பு தின்னி போன்ற உயிரினங்களும் உண்டு. காடுகளில் அல்லது மிருகக் காட்சி சாலைகளில் மட்டுமே காண முடியும் அவற்றை காண, கோவை சுற்றுவட்டார மக்கள் என் வயலுக்கு வந்து செல்கின்றனர்!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X