குளிர்கால கூட்டத் தொடருக்கு மத்திய அரசு தயார்! 28ல் அனைத்து கட்சி கூட்டம்

Updated : நவ 24, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் சவாலை சந்திக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. வரும் 28ல் நடக்கவுள்ள அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு
குளிர்கால கூட்டத் தொடர், மத்திய அரசு...தயார்!

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் சவாலை சந்திக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. வரும் 28ல் நடக்கவுள்ள அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு குளிர் கால கூட்டத் தொடரை நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.கொரோனா தொற்று பரவல் அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், வழக்கம் போல சமூக இடைவெளி மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடியதாகவே இம்முறையும் குளிர்கால கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


19 அலுவல் நாட்கள்ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் பரிந்துரையை ஏற்று, 'வரும் 29ம் தேதி குளிர்கால கூட்டத் தொடர் துவங்கும்' என, லோக்சபா செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அடுத்த மாதம் 23ம் தேதி வரை சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களைத் தவிர்த்து, 19 அலுவல் நாட்களைக் கொண்டதாக இந்தக் கூட்டத் தொடர் அமைய உள்ளது.இம்முறையும் எம்.பி.,க்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருமே தடுப்பூசி போட்டுள்ளனரா என உறுதி செய்யப்பட்ட பின் அனுமதிக்கப்படவுள்ளனர்.
பெகாசஸ் உளவு மென்பொருள் வாயிலாக போன் ஒட்டு கேட்பு விவகாரம் பெரிய அளவில் வெடித்து, கடந்த மழைக்காலக் கூட்டத் தொடர் முழுதுமே பாதிப்புக்கு உள்ளானது.எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியிருந்தாலும்கூட, பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு அதிரடியாக நிறைவேற்றியதை காண முடிந்தது.சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் பெற்ற கணிசமான வெற்றி மற்றும் விரைவில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடக்கவுள்ள தேர்தல் ஆகியவற்றால் இந்த கூட்டத்தொடர் முக்கியத்து வம் பெற்றுள்ளது.மேலும், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுமென அறிவிப்பு வெளியாகியும், தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கூறி, கூடுதல் கோரிக்கைகளையும் வைத்து விவசாயிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.


பிரச்னையை கிளப்பலாம்பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் பொதுமக்கள் பலர் மீது நடந்த தாக்குதல் சம்பவங்கள் ஆகியவை குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தான் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதை ஒட்டி, வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வரும் 28ல் நடைபெறஉள்ளது.


முக்கியத்துவம் வாய்ந்ததுபொதுவாக அரசு தரப்பில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம்.இம்முறை, பிரதமர் நரேந்திர மோடியே இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிய வந்துஉள்ளது. அன்று காலை 11:00 மணிக்கு பார்லிமென்ட் நுாலக அரங்கில் நடக்கும் இந்த கூட்டத்தில், அனைத்து பார்லிமென்ட் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.எதிர்க்கட்சிகளின் ஆவேசத்தை தணிக்கும் வகையில் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதால், இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.மேலும் அன்று மதியம் 3:00 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.அன்று மாலை பா.ஜ.,வின் உச்சபட்ச அதிகார அமைப்பாக கருதப்படும் பா.ஜ., பார்லிமென்ட் போர்டின் செயற்குழு கூட்டமும் நடக்கவுள்ளது.


எதிர்க்கட்சிகளின் சவால்பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இதில் பங்கேற்று முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர்.மேலும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டமும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடக்க உள்ளன. 'குளிர்கால கூட்டத் தொடர் குறித்த அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கவுள்ளதன் வாயிலாக, எதிர்க்கட்சிகளின் சவாலை சந்திக்க மத்திய அரசு தயாராகி விட்டதாகவே தெரிகிறது' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


காங்கிரஸ், திரிணமுல் எதிர்ப்புதனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதா குறித்து இறுதி அறிக்கை தயாராகி உள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக, காங்., - திரிணமுல் காங்., பிஜு ஜனதா தள எம்.பி.,க்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இந்த மசோதா குறித்து மற்றவர்களுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சி பலனளிக்கவில்லை. அதனால், வேறு வழியில்லாமல் எதிர்ப்பு கருத்தை பதிவிட்டுள்ளேன். அதே நேரத்தில் பிரதமர் மோடி அரசில் முதல் முறையாக ஜனநாயக முறையில் இந்த கூட்டுக் குழு கூட்ட விவாதங்கள் நடந்துள்ளன. இனி, இந்த விஷயத்தில் பார்லிமென்ட் தான் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டுக் குழுவில் உள்ள காங்., - திரிணமுல் காங்., மற்றும் பிஜு ஜனதா தள எம்.பி.,க்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக

தெரிகிறது. - நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202117:23:29 IST Report Abuse
அப்புசாமி காங்கிரஸ் நாட்டைக் கெடுத்ததுன்னு வசை பாடிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்த கூட்டி அதிலே எப்பிடி முகம் குடுத்து பேசுவாங்களோ? வெவஸ்தை கெட்டவங்க.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-நவ-202105:20:27 IST Report Abuse
Kasimani Baskaran இந்தமுறை அமளி செய்தால் கூட்டத்தொடர் முழுவதும் தொங்கவிடும் நடைமுறையை கொண்டுவரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X