பொது செய்தி

இந்தியா

'பூஸ்டர் டோஸ்' பலனளிக்குமா?: தெரியாது என்கிறது ஐ.சி.எம்.ஆர்.

Updated : நவ 24, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : ''கொரோனா தடுப்பூசி இரு 'டோஸ்' செலுத்தியோருக்கு கூடுதலாக 'பூஸ்டர் டோஸ்' போட்டால் நோய் தடுப்பு திறன் அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை,'' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். பரிசீலிக்கப்படும் இந்தியாவில் 82 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ்; 43
பூஸ்டர் டோஸ், பலன், தெரியாது,ஐ.சி.எம்.ஆர்.,

புதுடில்லி : ''கொரோனா தடுப்பூசி இரு 'டோஸ்' செலுத்தியோருக்கு கூடுதலாக 'பூஸ்டர் டோஸ்' போட்டால் நோய் தடுப்பு திறன் அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை,'' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.


பரிசீலிக்கப்படும்


இந்தியாவில் 82 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ்; 43 சதவீதத்தினருக்கு இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை, 116 கோடியே 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் நோக்கில், 'வீடு தேடி தடுப்பூசி' திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் பேசும்போது, 'இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் வல்லுனர் குழு பூஸ்டர் டோஸ் தர அனுமதி அளித்தால், அதை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார்.

இது குறித்து டாக்டர் பல்ராம் பார்கவா கூறியதாவது: வயது வந்த அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.


ஆதாரங்கள் இல்லை


ஆனால், இரண்டு டோஸ் செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் வாயிலாக கூடுதலாக நோய் தடுப்பு திறன் பெற முடியும் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
23-நவ-202122:20:10 IST Report Abuse
ராம.ராசு முகக் கவசம் போட்டுக்கொண்டால் கொரோனா தொற்றாதா? அப்படிச் சொல்ல முடியாது. அடிக்கடி கையைக் கழுவிக் கொண்டால் கொரோனா தொற்றாதா? அப்படிச் சொல்லமுடியாது. அடிக்கடி கிரிமினாசினியை கையில் தடவிக்கொண்டால் கொரோனா தொற்றாதா? அப்படிச் சொல்ல முடியாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் கொரோனா தொற்றாதா? அப்படியும் சொல்ல முடியாது. ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்டால் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா தொற்றாதா? இல்லை, இரண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதாவது கொரோனா தொற்றாமல் இருக்குமா? அப்படியும் சொல்ல முடியாது. பூஸ்டர் போட்டுக்கொண்டால்.... அப்போதாவது கொரோனா தொடராமல் இருக்குமா "''கொரோனா தடுப்பூசி இரு 'டோஸ்' செலுத்தியோருக்கு கூடுதலாக 'பூஸ்டர் டோஸ்' போட்டால் நோய் தடுப்பு திறன் அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை,'' என்று ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவிக்கிறார். ஹோமியோபதி மருத்துவத்தில், சித்த மருத்துவத்தில் குணப்படுத்த முடியும் என்று சொல்லுகிறார்களே அப்படியான தவறான கருத்துக்களை யாரும் சொல்லக் கூடாது. அப்படிப்பட்ட கருத்தைப் பரப்பினால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று அரசு ஆணை உள்ளதே. இருக்கலாம்.. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளத்தான் வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் சில பாதிப்புகள் வருவதாக செய்திகளில் வருகிறதே. இருக்கலாம். என்றாலும் தடுப்பூசி கண்டிப்பாகப் போட்டுக்கொள்ளவேண்டும். கொரோனாவுக்கான பாதுகாப்பு முறைகளை தற்போது பெரும்பாலும் கடைப்பிடிப்பது இல்லை என்று சொல்லப்படுகிறது. கொரொனோ தொற்றுக்கூட குறைந்து விட்டது என்று செய்திகள் சொல்லுகிறதே. பரவாயில்லை தடுப்பூசி அவசியம். போடாவிட்டால் பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேற... வேற...
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
23-நவ-202117:38:19 IST Report Abuse
Priyan Vadanad அப்ப ஏண்டாப்பா இந்த மருந்துகளை வற்புறுத்தி போட வைக்கிறீங்க?
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
23-நவ-202116:32:21 IST Report Abuse
ஜெயந்தன் தடுப்பூசி யே ...பயனளிக்குமா என்று தெரியவில்லை..தடுப்பூசி போட்டவருக்கும் கொரோனா தொற்று வருகிறது..இதிலே பூஸ்டர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X