ஜெய்ப்பூர் :'கஞ்சா விற்பனை செய்த அமேசான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரியுள்ளது.'ஆன்லைன்' வர்த்தகத்தில், ஈடுபட்டுள்ள 'அமேசான்' நிறுவனம் சமீபத்தில் கஞ்சா 'சப்ளை' செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து சி.ஏ.ஐ.டி., எனப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் சுபாஷ் கோயல் கூறியதாவது:கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படும் அமேசான் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் பதிவான வழக்கை தீவிரமாக விசாரித்து, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இதுபோன்ற பரிவர்த்தனைகளை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் உரிய விதிகளை உருவாக்க வேண்டும்.விதிகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எவ்வித தளர்வும் அளிக்கக்கூடாது. ஆன்லைன் நிறுவனங்கள் பாரம்பரிய வர்த்தக சந்தைக்குள் நுழைந்துவிட்டன. அவர்களின் சவாலை ஏற்க நாங்கள் தயார். ஆனால், அந்நிறுவனங்கள் இளைஞர்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதை ஏற்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய்ப்பூர் :'கஞ்சா விற்பனை செய்த அமேசான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரியுள்ளது.'ஆன்லைன்' வர்த்தகத்தில், ஈடுபட்டுள்ள
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது