பொது செய்தி

இந்தியா

'மேலும் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்' :- விவசாய சங்க தலைவர்

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
டில்லி: விவசாயிகளின் மேலும் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை போராட்டம் தொடருமென கூட்டமொன்றில் உரையாற்றிய விவசாய சங்க தலைவர் ராகேஷ் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.சமயத் கிஷான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு நடத்திய மகா பஞ்சாயத் நிகழ்ச்சியில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் ராகேஷ் திகாயத் உரையாற்றினார். குறைந்தபட்ச விவசாயிகள் ஆதரவு விலை (எம்எஸ்பி) குறித்து

டில்லி: விவசாயிகளின் மேலும் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை போராட்டம் தொடருமென கூட்டமொன்றில் உரையாற்றிய விவசாய சங்க தலைவர் ராகேஷ் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.



latest tamil news




சமயத் கிஷான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு நடத்திய மகா பஞ்சாயத் நிகழ்ச்சியில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் ராகேஷ் திகாயத் உரையாற்றினார். குறைந்தபட்ச விவசாயிகள் ஆதரவு விலை (எம்எஸ்பி) குறித்து பிரதமர் மோடி நியாயமான விளக்கம் அளிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு இந்த குறைந்தபட்ச நியாயவிலை மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி இந்த விலையை அதிகரிக்க ராகேஷ் டிக்கெட் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக பதவி வகித்த காலகட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி இதனை அதிகரிப்பதாக கூறியதாக ராகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய ராகேஷ், விவசாயிகள் தங்களது மொழியில் இதனை அரசியல் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டதாகவும் ஆனால் டில்லியில் சொகுசு கட்டடங்களில் அமர்ந்திருக்கும் அரசியல் தலைவர்களுக்கு விவசாயிகளின் மொழி புரியாமல் அவர்களது மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டதை சுட்டிக்காட்டிய காட்டிய ராகேஷ், மத்திய அரசுதான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருக்கிறதே தவிர விவசாயிகள் இன்னும் முன்வரவில்லை என்று கூறியுள்ளார்.

விவசாய சட்டங்கள் பல இன்னும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், அவை மாற்றப்படும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிடம் மத்திய பாஜ., அரசு நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனில் இந்தியாவின் பல மாநிலங்களில் விவசாயிகள் மாநாடு நடத்தப்படும் என்றும் இந்திய மக்களுக்கு மத்திய அரசு விவசாயிகளிடம் நடந்துகொள்ளும் முறை குறித்து அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


latest tamil news



ஹிந்து-இஸ்லாமியர், இந்து-சீக்கியர், ஜின்னா ஆதரவாளர்கள் என மத்திய பாஜ., அரசு தொடர்ந்து மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்த முயலும். ஆனாலும் தொடர்ந்து விவசாயிகள் ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு எதிராகப் போராடவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய மசோதாக்கள் மத்திய அரசால் திரும்பப்பெறப்பட்டாலும் விவசாயிகளின் 6 கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

லகிம்பூர் கெரி விவகாரத்தில் யூனியன் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கைது, குறைந்தபட்ச நியாய விலை குறித்த பேச்சு வார்த்தை என்று விவசாயிகள் இன்னும் பல விஷயங்களை மத்திய அரசிடம் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்ய ஓர் தனி கமிட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராக பதவி வகித்த காலகட்டத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி இதே கருத்தை வலியுறுத்தியதாக கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டத்தில் பலநூறு விவசாயிகள் மடிந்த போதிலும் ஊடகங்கள் தொடர்ந்து விவசாயிகளிடமே எதிர்கேள்வி எழுப்பி வருவதாக ராகேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மின்சார மசோதா நீக்கம், போராட்டத்தில் மறைந்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைத்தல், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதுள்ள வழக்குகளை நீக்குதல் உள்ளிட்ட பல அடுக்கடுக்கான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் என்று ராகேஷ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202112:29:50 IST Report Abuse
Balaji Radhakrishnan இவனை சும்மா விடக்கூடாது. இவன் பின்னால் தேசிய விரோத கும்பல் இருக்கின்றது. இவனை NIA விசாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
23-நவ-202110:58:48 IST Report Abuse
அறவோன் @ Sankar: 700க்கும்மேல் விவசாயிகளை கொன்றது தீயம்தான்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
23-நவ-202110:41:53 IST Report Abuse
Anand இவனை சுட்டுக்கொல்லவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X