அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை ஏமாற்றும் செயல்: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Added : நவ 22, 2021
Share
Advertisement
சென்னை : 'தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது, மக்களை ஏமாற்றும் செயல்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: மத்திய அரசு, பெட்ரோல் மீதான வரியை, லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. அதை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான
 மக்களை ஏமாற்றும் செயல்: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை : 'தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது, மக்களை ஏமாற்றும் செயல்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மத்திய அரசு, பெட்ரோல் மீதான வரியை, லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. அதை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை கணிசமாக குறைத்துள்ளன.தமிழக அரசும் வரியை குறைக்கும் என எதிர்பார்த்த நிலையில், 2014ல் இருந்த அளவுக்கு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

இந்நடவடிக்கை தானாகவே, மாநிலங்களின் வரியை குறைத்து விடும் என, தமிழக நிதி அமைச்சர் கூறி உள்ளார். இது, தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.மத்திய அரசின் வரி அதிகரித்தபடி செல்வதால், மாநில அரசின் வரியை குறைக்க இயலாது என, நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருக்கும் போது, தமிழக அரசு மட்டும் இயலாது எனக் கூறுவது நியாயமற்றது.மத்திய அரசின் இந்த வரி விதிப்பு, தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருந்து வருகிறது.

இதையெல்லாம் தெரிந்து தானே, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதில் நிபந்தனை எதுவும் இல்லையே.தற்போது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினால், மத்திய அரசு விலைகளை குறைக்க வேண்டும் என, தமிழக நிதி அமைச்சர் கூறுகிறார். இது, மக்களை ஏமாற்றும் செயல்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X