கோர்ட் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

Added : நவ 22, 2021
Share
Advertisement
சென்னை : வரி மதிப்பீடு வட்டத்தை மாற்றுவதற்கு, லஞ்சம் பெற்ற வணிக வரி உதவி கமிஷனருக்கு, இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கோட்டையைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர், 'ஆரஞ்ச் ஹெல்த்கேர் பார்மாசூட்டிகல் மார்கெட்டிங்' நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் 2012ல், தன் நிறுவனத்தை, மத்திய விற்பனை மதிப்பீடு
 லஞ்ச அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

சென்னை : வரி மதிப்பீடு வட்டத்தை மாற்றுவதற்கு, லஞ்சம் பெற்ற வணிக வரி உதவி கமிஷனருக்கு, இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கோட்டையைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர், 'ஆரஞ்ச் ஹெல்த்கேர் பார்மாசூட்டிகல் மார்கெட்டிங்' நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் 2012ல், தன் நிறுவனத்தை, மத்திய விற்பனை மதிப்பீடு வட்டத்தில் இருந்து, செங்கோட்டை வரி மதிப்பீடு வட்டத்திற்கு மாற்றக் கோரி, தமிழக வணிகவரித் துறை, மயிலாப்பூர் மண்டலத்தில் உதவி கமிஷனராக பணியாற்றிய விஜயராகவனிடம் விண்ணப்பித்து உள்ளார்.

இதற்கு, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மாற்றித் தருவதாக அவர் கூறி உள்ளார். 15 ஆயிரம் ரூபாய் தருவதாக, வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் அளித்தார்.விஜயராகவன் பணத்தை வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ் முன் நடந்தது. அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் மனோகரன் வாதாடினார்.

விசாரணையில், உதவி கமிஷனர் விஜயராகவன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X