அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இருளர் பெண்களுக்கு நீதி தேவை': பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

Added : நவ 22, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : 'இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில், திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை உடனே தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகில், இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் போலீஸ் துறையினரால் பாலியல் வன்கொடுமை
 'இருளர் பெண்களுக்கு நீதி தேவை': பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

சென்னை : 'இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில், திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை உடனே தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகில், இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் போலீஸ் துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த வழக்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய இவ்வழக்கில், திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகைகூட இன்னும் தாக்கல் செய்யப்படாதது கவலையும், வேதனையும் அளிக்கிறது.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட போலீசார், துவக்கத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும், பின் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, மீண்டும் பணியில் சேர்ந்து விட்டனர். அவர்கள் இப்போதும் பணியில் உள்ளனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, இந்த வழக்கை போலீஸ் துறை தாமதப்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, 10 ஆண்டுகளுக்குப் பின் நீதி மறுக்கப்படுவது நியாயமல்ல.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து விபரங்களும், தற்போதைய டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு நன்றாக தெரியும்.இந்த கொடிய நிகழ்வு நடந்தபோது, வடக்கு மண்டல காவல் துறை தலைவராக இருந்தவர் அவர்தான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்ததும் அவர்தான். இவ்வழக்கு குறித்த அனைத்து உண்மைகளையும் அறிந்த அவருக்கு, இந்த வழக்கை இயல்பான முடிவுக்கு கொண்டு வரும் கடமை உள்ளது.

இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில், திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை உடனே தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை விழுப்புரம் வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
24-நவ-202101:35:35 IST Report Abuse
Nagercoil Suresh இவருக்கு ஜாதியை விட்டால் வேறு எதுவும் தெரியாது போல, இவர் பின்னால் போகும் மக்கள் தான் விழித்துக்கொள்ளவேண்டும்
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
24-நவ-202100:35:09 IST Report Abuse
அன்பு நானும் இருக்கிறேன் என்பதை போன்ற கூவல்
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
23-நவ-202117:44:40 IST Report Abuse
m.viswanathan இவருக்கு இருக்கும் சமுதாய அக்கறை வேறு யாருக்குமே கிடையாது . அதனால் தான் தமிழக சரித்திரத்தில் தன் மகனும் முதலமைச்சராக இருக்க வேண்டும் என அவ்வப்போது குரல் கொடுக்கிறார் . இவர் போன்ற தலைவர்கள் இந்த மண்ணுக்கு நிறைய பேர் வேண்டும் என்றால் , மறுபடி ஒரு பெரியார் பிறக்க வேண்டும் . அந்த ஆளும் பொழுது போகாமல் , இது போல் மேலும் நிறைய பேரை வளர்த்து விட்டு போவார் , நல்ல நாடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X