பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரியத்திற்கு ரூ.15 கோடி இழப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
சென்னை : வேலுார், திருப்பத்துாரில் பெய்த கன மழையால், 15 கோடி ரூபாய் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இம்மாதம் 6ம் தேதி முதல் ஒரு வாரம் பெய்த கன மழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அந்த இடங்களில் இருந்த மின் வினியோக சாதனங்கள் தண்ணீரில் மூழ்கின. இருப்பினும் மின் வாரியத்திற்கு பெரிதாக சேதம்
 மின் வாரியத்திற்கு ரூ.15 கோடி இழப்பு

சென்னை : வேலுார், திருப்பத்துாரில் பெய்த கன மழையால், 15 கோடி ரூபாய் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இம்மாதம் 6ம் தேதி முதல் ஒரு வாரம் பெய்த கன மழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அந்த இடங்களில் இருந்த மின் வினியோக சாதனங்கள் தண்ணீரில் மூழ்கின. இருப்பினும் மின் வாரியத்திற்கு பெரிதாக சேதம் ஏற்படவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் பெய்த கன மழையால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்று ஓரங்களில் இருந்த மின் கோபுரம், மின் கம்பம் உள்ளிட்ட சாதனங்கள் சேதமடைந்தன. அதன்படி, வேலுாரில் 500 கம்பங்கள்; 110 கிலோ வோல்ட் திறன் மின் வழித்தடத்தில், 5 மின் கோபுரங்கள்; 10 கி.மீ., மின் கம்பி; 17 டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்துள்ளன.

திருப்பத்துாரில் 272 கம்பங்கள், எட்டு டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்களும் சேதம் அடைந்துள்ளன. அவற்றின் மதிப்பு 15 கோடி ரூபாய்.சேதமடைந்த மின் சாதனங்களை சீரமைத்து, மின் வினியோகம் செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X