அரசியல் செய்தி

தமிழ்நாடு

வங்கதேச விடுதலை பொன்விழா நிகழ்ச்சி

Added : நவ 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''இந்திராவின் தொலைநோக்கு பார்வையும், இந்திய ராணுவத்தின் அணுகுமுறையும் தான் வங்க தேசம் விடுதலை பெற உதவியது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசினார்.பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனி நாடாக விடுதலை பெற்றதன் பொன்விழா ஆண்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசியதாவது:கடந்த 1971ல் வங்கதேசம் விடுதலை பெற காரணமாக
 வங்கதேச விடுதலை பொன்விழா நிகழ்ச்சி

சென்னை : ''இந்திராவின் தொலைநோக்கு பார்வையும், இந்திய ராணுவத்தின் அணுகுமுறையும் தான் வங்க தேசம் விடுதலை பெற உதவியது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசினார்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனி நாடாக விடுதலை பெற்றதன் பொன்விழா ஆண்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசியதாவது:கடந்த 1971ல் வங்கதேசம் விடுதலை பெற காரணமாக இருந்தவர் இந்திரா. உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, வங்க தேச விடுதலைக்கு ஆதரவு திரட்டினார். இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்களுக்கு ஆதரவு அளித்தார்.

இந்திராவின் தொலைநோக்கு பார்வையும், இந்திய ராணுவத்தின் தெளிவான அணுகுமுறையும் தான், வங்கதேசம் விடுதலை பெற உதவின.இவ்வாறு அவர் பேசினார். விழாவில், காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு அகில இந்திய அமைப்பாளர் பிரவீன்தவார், காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆதம்பாக்கம், ஏரிக்கரை தெருவில், மக்கள் விழிப்புணர்வு பிரசார பயணம், மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில் நேற்று மாலையில் நடந்தது. அழகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-நவ-202112:19:25 IST Report Abuse
jayvee வங்கதேசத்தின் விடுதலை தினத்தை கொண்டாடும் இஸ்லாமிய கட்சியாக மாறியது காங்கிரஸ்.. கேவலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X