தொழிலக பாதுகாப்பு: ரூ.22 லட்சத்தில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலக பாதுகாப்பு: ரூ.22 லட்சத்தில் ஆய்வு

Added : நவ 22, 2021
Share
சென்னை : தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக அலுவலர்களுக்கு, ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்து பயிற்சி அளிக்க, தமிழக அரசு, 22 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது.தமிழகத்தில் 1,765 ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகள், 10 ஆயிரத்து 663 அபாயகரமான தொழிற்சாலைகள், 174 பெரும் விபத்து ஏற்படக்கூடிய தொழிற்சாலைகள் உள்ளன.பெரும் விபத்து ஏற்படக்கூடிய தொழிற்சாலைகளில், வெவ்வேறு விதமான

சென்னை : தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக அலுவலர்களுக்கு, ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்து பயிற்சி அளிக்க, தமிழக அரசு, 22 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது.

தமிழகத்தில் 1,765 ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகள், 10 ஆயிரத்து 663 அபாயகரமான தொழிற்சாலைகள், 174 பெரும் விபத்து ஏற்படக்கூடிய தொழிற்சாலைகள் உள்ளன.பெரும் விபத்து ஏற்படக்கூடிய தொழிற்சாலைகளில், வெவ்வேறு விதமான செயல்முறைகள் நடப்பதால், பல்வேறு விதமான பாதுகாப்பு வழிமுறைகளை, கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் வழிமுறைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்குவது அவசியமாகிறது.

எனவே, பயிற்சி அளிக்க, அமைச்சர் அறிவித்தபடி நிதி ஒதுக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர், அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு, 22 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசாணையை, தொழிலாளர் நலத் துறை செயலர் கிர்லோஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X