அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பொருளாதார முன்னேற்றமே தமிழக அரசின் நோக்கம்'

Added : நவ 22, 2021
Share
Advertisement
சென்னை : ''தகவல் தொழில்நுட்ப துறையை மாநிலத்தில் மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை முன்னேற்றுவதே அரசின் நோக்கம்,'' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். எதிர்கால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஆலோசனை குழு கூட்டம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று

சென்னை : ''தகவல் தொழில்நுட்ப துறையை மாநிலத்தில் மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை முன்னேற்றுவதே அரசின் நோக்கம்,'' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

எதிர்கால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஆலோசனை குழு கூட்டம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.இதில், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர் பேசியதாவது: ஆறு மாதங்களில், தகவல் தொழில்நுட்பத் துறை பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது. முதல்வரின் ஆலோசனைப்படி, எதிர்கால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக, அமைக்கப்பட்ட ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் நடந்தது.வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை மாநிலத்தில் மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை முன்னேற்ற, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நாட்டிலேயே முன்னணி துறையாக, தகவல் தொழில்நுட்பத் துறையை மாற்ற, இந்த குழு அச்சாணியாக இருக்கும். தமிழ்நாடு மின்னாளுமை முகமை வாயிலாக, முதலீடுகளையும் ஈர்த்து வருகிறோம். முறையாக வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதும், இந்த ஆலோசனை குழுவின் நோக்கம். கொரோனாவிற்கு பின், தகவல் தொழில்நுட்பத் துறை செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு அணுகுமுறை, வணிகம் செய்வது எளிது, செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் நிறுவனங்கள் முதலீடு செய்யும். 10 ஆண்டுகளில் நிறைய வணிகம் மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறது.நிச்சயமாக தொழில் துறைக்கு நண்பனாக இருப்போம். நல்ல சூழலை இந்த அரசு செய்து கொடுக்கும் என, தொழில் துறையினருக்கு மீண்டும் உறுதி அளிக்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் அரசின் செயல்பாட்டால், தொழில் துறையில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியாது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X